கிரிக்கெட் (Cricket)

எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இல்லை- தோல்வி குறித்து பண்ட் விளக்கம்

Published On 2025-11-26 15:30 IST   |   Update On 2025-11-26 15:30:00 IST
  • கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம்.

கவுகாத்தி:

கவுகாத்தியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

இது ஏமாற்றமளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதில் எதிரணிக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இல்லை. எதிர்காலத்தில், நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக மாறுவோம்.

கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை. அது முழு தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. எங்கள் சொந்த திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதை தான் இந்த தொடரிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம். இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என பண்ட் கூறினார். 

Tags:    

Similar News