null
#DomesticViolence | உலக மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட விராட் கோலி
- கோலி பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- அதில், குடும்ப வன்முறை (Domestic Violence) குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விராட் கோலி தனது கையில் உள்ள காகிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டுகிறார். அதில், குடும்ப வன்முறை (Domestic Violence) குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த பதிவில், "ஒரு குற்றத்தை பார்த்தும் அமைதியாக இருப்பவன், அந்த குற்றத்தை செய்தவனுக்கு சமமான குற்றவாளி" என்று கோலி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், பல பெண்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கே நடந்த குடும்ப வன்முறையை (Domestic Violence) எதிர்த்து பேச முடியாமல் இருப்பார்கள். அவர்கள் பயம், குடும்ப அழுத்தம், சமூகம் போன்ற காரணங்களால் அமைதியாக இருப்பார்கள்.
அப்போது அந்த வன்முறையை பார்க்கும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் பேசாமல் இருந்தால் அவர்களும் ஒரு வகையில் அந்த குற்றத்திற்கு காரணமாகிவிடுகிறார்கள்.
குடும்ப வன்முறை நடக்கிறது. பலர் அதை பார்த்தும் எதுவும் பேசவில்லை என்றால் அந்த மௌனம் கூட ஒரு குற்றம்தான்" என்று கோலி தெரிவித்துள்ளார்.