கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கடைசி அணியாக UAE தகுதி

Published On 2025-10-17 12:08 IST   |   Update On 2025-10-17 12:08:00 IST
  • ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.
  • ஜப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது.

மஸ்கட்:

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

இதில் ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, ஜப்பானை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஜப்பான் 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் டாப்-3 இடத்தை உறுதி செய்ததுடன், உலகக் கோப்பை போட்டிக்கு 20-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெற்றது.

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 20 அணிகள் இந்த உலகக் கோப்பையில் விளையாட உள்ளன.

Tags:    

Similar News