கிரிக்கெட் (Cricket)

TNPL எலிமினேட்டர் போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் இன்று பலப்பரீட்சை

Published On 2025-07-02 08:27 IST   |   Update On 2025-07-02 08:27:00 IST
  • சேப்பாக் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
  • எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News