கிரிக்கெட் (Cricket)

எல்லையில் பதற்றமான சூழல்: தரம்சாலா ஐ.பி.எல் போட்டி மும்பைக்கு மாற்றம்?

Published On 2025-05-07 16:49 IST   |   Update On 2025-05-07 16:49:00 IST
  • பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
  • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டியும், வரும் 11ம் தேதி தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News