மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்காவிற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
- டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் முன்னேறின. நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதால் யார் தங்களது முதல் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.