டெஸ்ட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்பட வேண்டுமா?- கங்குலி அளித்த பதில்..!
- கவுதம் கம்பீர் தலைமயில் இந்திய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
- 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆடுகளம் மிகவும் மோசமான அமைக்கப்பட்டதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. மேலும், இவ்வாறுதான் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்ற கம்பீர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருந்தே தண்ணீர் தெளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கம்பீர் ஆடுகளம் குறித்து குறை கூறவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கம்பீர் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தோல்வியடைந்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வேண்டுமா? என கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கங்குலி "தற்போதைய நிலையில் கவுதம் கம்பீரை நீக்குவதற்கான கேள்வி இல்லை. இங்கிலாந்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்தாவிலும் சிறப்பாக விளையாடும் என் முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.