கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: நெல்லை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

Published On 2025-06-18 22:01 IST   |   Update On 2025-06-18 22:01:00 IST
  • பொறுப்புடன் விளையாடிய பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார்.
  • நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

சேலம்:

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் களமிறங்கினர். இதில் ராம் அரவிந்த் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பொறுப்புடன் விளையாடிய பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Tags:    

Similar News