கிரிக்கெட் (Cricket)

ஷ்ரேயாஸ் உடன் காதல்? மனம் திறந்த மிருணாள் தாகூர்

Published On 2025-12-13 12:28 IST   |   Update On 2025-12-13 12:28:00 IST
  • நடிகர் தனுசும், நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
  • அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் காதலிப்பதாக கூறப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்தது.

ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். அதில், பிரபலங்களாக இருப்பவர்கள் என்றால் விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ஆரம்ப காலங்களில் அவை எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது 'இதுவா?' என்று எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டேன். தேவையற்ற விமர்சனங்களை நான் கவனிக்கவே மாட்டேன். எந்த வதந்தியும் என் மனநிலையையோ, என் வாழ்க்கையையோ பாதிக்காது" என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News