கிரிக்கெட் (Cricket)

இந்திய கிரிக்கெட்டுக்கு Sad நாளான Sunday- ஒரே நாளில் 3 போட்டியில் தோல்வி

Published On 2024-12-09 15:52 IST   |   Update On 2024-12-09 15:52:00 IST
  • பிரிஸ்பேனில் நடந்த பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
  • துபாயில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்திய கிரிக்கெட்டுக்கு நேற்றைய தினத்தை சோகமான நாள் என்று தான் வர்ணிக்க வேண்டும். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இதே போல் பிரிஸ்பேனில் நடந்த பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

துபாயில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் கோப்பையை கோட்டை விட்டது.

இந்த நிலையில் ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் அணி 3 தோல்விகளை தழுவியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News