கிரிக்கெட் (Cricket)
null

268வது போட்டியில் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரோகித்.. 38வது போட்டியிலேயே தோனி செய்த சம்பவம்

Published On 2025-10-29 15:33 IST   |   Update On 2025-10-29 19:21:00 IST
  • அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார்.
  • அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் களமிறங்கிய இருவரில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசி அசத்தினார்.

இந்த தொடரின் தொடர் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஐசிசி-யின் பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். முதன் முறையாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் தனது 38 வயதில் (38Y, 73D) டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் No.1 இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோகித் (38Y 182D) ODI பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை தன்வசமாக்கியுள்ளார்.

மேலும் அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அவர் 268 போட்டிகளில் விளையாடி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் குறைந்த போட்டியில் நம்பர் ஒன் இடத்தை எம் எஸ் தோனி பிடித்துள்ளார். அவர் வெறும் 38 போட்டிகள் விளையாடிய போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக சுப்மன் கில் (41 போட்டி), சச்சின் டெண்டுல்கர் (102 போட்டி), விராட் கோலி (112), ரோகித் சர்மா (268 போட்டி) ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News