2-வது இன்னிங்சில் 167 ரன்னில் பாகிஸ்தான் ஆல் அவுட்- தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு
- சபீக் 41 ரன்னிலும் பாபர் அசாம் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
லாகூர்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக சபீக்- இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மசூத் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சபீக் - பாபர் அசாம் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சபீக் 41 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் பாபர் அசாம் 42 ரன்னில் வெளியேறினார்.
இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சவுத் ஷகீல் பொறுப்புடன் விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.