கிரிக்கெட் (Cricket)
முத்தரப்பு தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது நியூசிலாந்து
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.