கிரிக்கெட் (Cricket)
null

தோனியால் கூட முடியவில்லை: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி முஷ்பிகுர் ரஹீம் சாதனை

Published On 2025-11-19 13:05 IST   |   Update On 2025-11-19 13:16:00 IST
  • 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
  • 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார்.

அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார். இந்திய ஜாம்பவான் எம்.எஸ். தோனி (90 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (96 டெஸ்ட்) போன்றோரால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100+ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர்கள்:

மார்க் பௌச்சர் (தென் ஆப்பிரிக்கா) - 147 டெஸ்ட்கள்

அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 133 டெஸ்ட்கள்

குமார் சங்கக்காரா (இலங்கை) - 134 டெஸ்ட்கள்

ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 114 டெஸ்ட்கள்

இயான் ஹீலி (ஆஸ்திரேலியா) - 119 டெஸ்ட்கள்

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 101 டெஸ்ட்கள்

ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 100 டெஸ்ட்கள்

முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - 100 டெஸ்ட்கள்*

Tags:    

Similar News