கிரிக்கெட் (Cricket)

போர் வீரரைப் போன்றவர்- சிராஜை புகழ்ந்து தள்ளிய ரூட்

Published On 2025-08-04 14:56 IST   |   Update On 2025-08-04 14:56:00 IST
  • அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர்.
  • இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாள் இன்று நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை. இந்திய அணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர். அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர். இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார். சில சமயங்களில் போலியான கோவத்தை வெளிப்படுத்துவார்.

ஆனால், அதைப் பார்க்கும்போதே போலி என நமக்குத் தெரிந்துவிடும். உண்மையிலேயே அவர் நல்ல மனிதர். மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்.

என கூறினார்.

Tags:    

Similar News