ரஞ்சியில் விளையாடும்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது? முகமது ஷமி
- உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை.
- என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன்.
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஷமி. இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார். நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சியில் விளையாட முடியும் என்றால். ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-
உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன். அவர்கள்தான என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாள் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால், பின்னர் ஏன் 50 ஓவர் போட்டியில் விளையாட முடியாது?. நான் உடற்தகுதியாக இல்லை என்றால், என்சிஏ-வில் இருந்திருப்பேன். ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது.
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.