கிரிக்கெட் (Cricket)

54 ஆண்டுகால மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த மேத்யூஸ்

Published On 2025-04-10 20:53 IST   |   Update On 2025-04-10 20:53:00 IST
  • சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
  • அவரது அணி தோல்வியடைந்த போதிலும், ஆட்டநாயகி விருது மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் ஒரு உலக சாதனையைப் பதிவு செய்தார்.

அதன்படி இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகி விருதை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.

இருப்பினும் அவரது அணியானது இப்போட்டியில் தோவ்லியைத் தழுவியது. இதன்மூலம் ஒரே போட்டியில் சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும்.

மேலும் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.

அவரது அணி தோல்வியடைந்த போதிலும், அவர் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும். இந்தப் பட்டியலில், அவர் தனது சக நாட்டவரான ஸ்டெஃபனி டெய்லரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த அட்டத்தில் அதிக ஆட்ட நாயகி விருதுகள்

5-ஹேலி மேத்யூஸ்

4-ஸ்டஃபானி டெய்லர்

2-எமி சாட்டர்த்வைட்

2-நிக்கோலா பிரவுன்

2-கிளேர் டெய்லர்

Tags:    

Similar News