ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: என்னடா இங்க இருந்த பந்தை காணோம்.. இஷான் கிஷன் செயலால் மைதானத்தில் சிரிப்பலை

Published On 2025-04-12 21:40 IST   |   Update On 2025-04-12 21:40:00 IST
  • 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது.
  • இந்த போட்டியில் நகைச்சுவையான ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 229 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் 82 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் நகைச்சுவையான ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த சம்பவத்தை அரங்கேற்றியது ஐதராபாத் அணியின் இஷான் கிஷன். பஞ்சாப் அணி வீரர் அடித்த பந்தை சிறப்பாக டைவ் அடித்து தடுத்தார்.

அதன்பிறகு பந்தை எடுத்து கீப்பரிடம் எறிவதற்காக பந்தை தேடிய போது அவரது கண்ணில் பந்து தென்படவில்லை. இதனால் அருகில் இருந்த பேட் கம்மின்ஸ் பந்தை எடுத்து கீப்பரிடம் எறிந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News