ஆர்சிபி அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட்
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் பெங்களூரு- ராஜஸ்தான் மோதுகிறது.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்தார்.
18-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சுவுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்ததுன்னு நினைக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். எங்கள் மருத்துவக் குழு அவரை விளையாட அனுமதிக்கவில்லை.
எனவே மேலும் அவர் பயணம் செய்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு ஆலோசனை வழங்கியது. அதேசமயம் இன்னும் இரண்டு விமானங்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால் கூட அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவருக்கு சிகிச்சை அளித்து, விரைவில் அவரைத் திரும்பக் கொண்டுவர முயற்சிப்பதற்காக, பிசியோவை அவருடன் வைத்திருந்தோம். அவர் குணமடைவதை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம்.
அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை. ஆனால் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். இப்போதைக்கு, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அதனால்தான் அவர் பெங்களூருக்கு பயணம் செய்யவில்லை.
என்று சஞ்சு சாம்சன் கூறினார்.