IPL 2025: ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசி சந்தீப் சர்மா மோசமான சாதனை
- டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார்.
- அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.