ஐ.பி.எல்.(IPL)

அரைசதம் விளாசிய சூர்யகுமார்- பஞ்சாப்புக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

Published On 2025-05-26 21:25 IST   |   Update On 2025-05-26 21:25:00 IST
  • மும்பை தரப்பில் சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்தார்.
  • பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரியான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மந்தமாக விளையாடிய ரோகித் சர்மா 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஹர்திக் 26 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த நமன் தீர் - சூர்யாகுமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News