ஐ.பி.எல்.(IPL)
null

தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளர் மீது பழி போட்ட லக்னோ ஆலோசகர் ஜாகீர் கான்

Published On 2025-04-02 12:22 IST   |   Update On 2025-04-02 13:43:00 IST
  • பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது.
  • பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது என ஜாகீர் கான் கூறினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளரே காரணம் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த விவகாரம் ஐபிஎல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.

பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன்.

ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

Tags:    

Similar News