ஐ.பி.எல்.(IPL)

குஜராத் அணிக்கு சோக செய்தி.. நட்சத்திர வீரர் விலகல்- மாற்று வீரராக குசல் மெண்டீஸ் அறிவிப்பு

Published On 2025-05-15 16:14 IST   |   Update On 2025-05-15 16:14:00 IST
  • குஜராத் அணியின் நட்சத்திர வீரருக்கு பதிலாக குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.
  • புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர்.

தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.

இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News