ஐ.பி.எல்.(IPL)
பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் எதிரொலி: கைவிடப்பட்ட பஞ்சாப், டெல்லி போட்டி
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
- பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.
தரம்சாலா:
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக டாஸ் போட தாமதமானது.
டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்னில் அவுட்டானார்.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.