ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

Published On 2025-04-28 10:37 IST   |   Update On 2025-04-28 10:37:00 IST
  • நேற்று மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின
  • இப்போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் லக்னோ அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் மீது ஐ.பி.எல். விதிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. 2-வது முறையாக அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணியில் உள்ள மற்ற வீரர்கள் மீதும் ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எழுந்துள்ளது. அவர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவாக இருக்கிறதோ அது அபராதமாக விதிக்கப்படும்.

Tags:    

Similar News