ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: மும்பையை வீழ்த்தி குவாலிபையர் 1 போட்டிக்கு தகுதி பெற்றது பஞ்சாப்

Published On 2025-05-27 06:28 IST   |   Update On 2025-05-27 06:28:00 IST
  • அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
  • இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றது.

பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை விளையாடவுள்ளது.

Tags:    

Similar News