ஐ.பி.எல்.(IPL)
சென்னையில் 3 போட்டி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா மகளிர் அணி
- இந்த தொடரின் 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
- இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை:
1. முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 14-ம் தேதி
2. 2-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 17-ம் தேதி
3. 3-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 20-ம் தேதி