கிரிக்கெட் (Cricket)

இந்திய பேட்டர்களை போட்டு பொளந்த வர்ணனையாளர்

Published On 2024-10-25 19:59 IST   |   Update On 2024-10-25 19:59:00 IST
  • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது.

முதல் டெஸ்ட் போட்டியை போன்றே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்டர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதைத் தொடர்ந்து இந்திய பேட்டர்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

இது குறித்து பேசும் போது, "இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என தவறான புரிதல் இப்போதும் பலரிடம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றவர்கள் சுழற்பந்துவீச்சை நேர்த்தியாத எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். அவர்களின் காலம் கடந்து விட்டது."

"இந்த காலத்து இந்திய பேட்டர்களுக்கும், மற்ற நாட்டு பேட்டர்களுக்கும் வித்தியாசமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. நல்ல சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் தடுமாறி வருகின்றனர்," என்று சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News