148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை... மோசமான சாதனை படைத்த இந்தியா
- 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து இந்தியா ஆல்-அவுட் ஆனது.
- 2-வது இன்னிங்சில் 373 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. கடந்த 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.