15 சிக்சர் உள்பட 32 பந்தில் சதமடித்த சூர்யவன்ஷி: இந்தியா ஏ அணி அபார வெற்றி
- முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
- வைபவ் சூர்யவன்ஷி 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார்.
தோஹா:
இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைத்தார். அவர் 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 25 சிக்சர், 24 பவுண்டரிகள் அடித்தது.
வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ரும், ஜிதேஷ் சர்மா 6 சிக்சரும் அடித்தனர்.
அடுத்து ஆடிய யுஏஇ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் அடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.