null
IND vs ENG: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவரும் நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.
ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்சன் 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழக்க தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.
கருண் நாயர் 20 ரன்களில் வெளியேற ஜடேஜா 25 ரன்கள் சேர்த்தார். சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங்க, ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எனவே முந்திய இன்னிங்சின் 6 ரங்களுடன் சேர்த்து, 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலானாது துரத்த முற்பட்டுள்ளது.