கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் போட்டியை பார்க்க பொறாமையாக உள்ளது- பவுமா

Published On 2025-11-22 10:52 IST   |   Update On 2025-11-22 10:52:00 IST
  • விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன்.
  • இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இன்று (நேற்று) காலை எழுந்ததும், ஆஷஸ் போட்டியை டி.வி.யில் பார்த்தோம். இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன். தற்போது நாங்கள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இது 1-1 அல்லது 2-0 என்று முடியவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். சமனுக்கு பதிலாக தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பு உருவாகும்' என்றார்.

Tags:    

Similar News