சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகும் சஞ்சு சாம்சன்
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
- டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை Trade செய்யலாம் எனத் தகவல்.
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி அணி அவரை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரிஸ்டன ஸ்டப்ஸை ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை கொடுத்துவிட்டு, ஸ்டப்சை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் Uncapped வீரர் ஒருவரையும் கேட்டுள்ளது. ஆனால், டெல்லி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.