கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற ஹர்திக் பாண்ட்யா- அடுத்து செய்த நெகிழ்ச்சி செயல்

Published On 2025-09-20 16:17 IST   |   Update On 2025-09-20 16:20:00 IST
  • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
  • இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 188 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுதது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இம்பேக்ட் பிளேயர் விருது வழங்கப்பட்டது. அவர் பதக்கத்தை உதவி பயிற்சியாளரான தயானந்த் கரனியிடம் வழங்கினார், அவர் ஃபீல்டிங் பயிற்சிகளின் போது அவருக்கு நிறைய உதவியுள்ளார் எனவும் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

ஓமன் வீரர் அமீர் கலீம் அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருந்து பாண்ட்யா சிறப்பாக கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News