இந்தியாவுக்கு பேரிடி.. ஆஸ்திரேலிய அணியில் இணைந்த அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல்
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.
- இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து நாளை கடைசி ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி 3 போடிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.
இது இந்தியாவுக்கு சோக செய்தியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.