கிரிக்கெட் (Cricket)
null

ENGvsIND 5th Test இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: இந்திய அணியில் 4 மாற்றங்கள்..!

Published On 2025-07-31 15:11 IST   |   Update On 2025-07-31 15:17:00 IST
  • இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
  • இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் சுப்டன் கில் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு கருண் நாயர், ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்படடுள்ளனர்.

Tags:    

Similar News