கிரிக்கெட் (Cricket)
null

5-ம் நாள் உணவு இடைவேளை.. ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்

Published On 2025-06-24 17:34 IST   |   Update On 2025-06-24 17:35:00 IST
  • இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.
  • டக்கெட் அரை சதம் அடித்து அசத்தினார்.

லீட்ஸ்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்களான கிராவ்லி மற்றும் டக்கெட் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இவர்களது பாட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ளது. இதில் டக்கெட் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் 5-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News