null
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சல்லடை போட்டு Shortlist செய்த BCCI.. இந்திய அணி இதுவா?
- இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.
ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும் இருக்க வாய்ப்புள்ளது.
5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.