கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடர்: டுவிஸ்ட்டுடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published On 2025-11-19 17:20 IST   |   Update On 2025-11-19 17:20:00 IST
  • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
  • 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 12 பேர் கொண்ட அணியில் எந்த வீரர் லெவனில் இடம் பெற மாட்டார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. அதற்கான தேர்வை ரசிகர்களிடமும் ஆஸ்திரேலிய அணியிடமும் இங்கிலாந்து அணி விட்டுவிட்டது போல இந்த அணி விவரத்தை அறிவித்துள்ளது.

இறுதி லெவனில் ஆடுகள நிலைமைகளைப் பொறுத்து அனைத்தும் வேகப்பந்து வீச்சு அட்டாக் அல்லது சுழற்பந்து வீச்சாளார் பஷீர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News