கிரிக்கெட் (Cricket)

கருப்பு சாக்ஸ் அணிந்து விளையாடிய சுப்மன் கில்: அபராதம் விதிக்க வாய்ப்பு..!

Published On 2025-06-21 16:04 IST   |   Update On 2025-06-21 16:04:00 IST
  • முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
  • சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் விளாசினார்.

நேற்றைய போட்டியின்போது சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் (black socks) அணிந்து விளையாடியுள்ளார். ஐசிசி விதியின்படி ஒரு வீரர் வெள்ளை, க்ரீம (Cream) அல்லது வெளீர் சாம்பல் (light grey) ஆகிய கலர் கொண்ட சாக்ஸ்தான் அணிய வேண்டும். ஒருநாள் போட்டிக்கும் இந்த விதி அடங்கும்.

ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரணங்கள் விதிகளின் பிரிவு 19.45 இன் படி, ஒரு வீரர் மேற்கூறிய வண்ணங்களின் சாக்ஸ் அணிய வேண்டும். இதனை சுப்மன் கில் மீறியுள்ளார். இதற்காக ஐசிசி அவருக்கு 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுதற்கு தடை விதிப்பதற்கான ஒரு புள்ளி பெறவும் வாய்ப்புள்ளது.

எனினும், அவருடைய சாக்ஸ் அதிக ஈரப்பதம் ஆகி அல்லது வழக்கத்திற்க மாறாக தற்செயலாக அணிந்திருந்தால் அபராத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Tags:    

Similar News