கிரிக்கெட் (Cricket)

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த எல்லிஸ் பெர்ரி

Published On 2024-12-08 18:43 IST   |   Update On 2024-12-08 18:43:00 IST
  • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்கள் குவித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் எல்லிஸ் பெர்ரி 7080 ரன்களும் 330 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்த போட்டியில் 105ரன்கள் அடித்தான் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை எல்லிஸ் பெர்ரி படைத்தார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் எல்லிஸ் பெர்ரி 7080 ரன்களும் 330 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். பெர்ரி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 928 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4064 ரன்களும், 165 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2088 ரன்கள் மற்றும் 126 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Tags:    

Similar News