கிரிக்கெட் (Cricket)
ENGvsIND 5th test முகமது சிராஜ் 5 விக்கெட் வீழ்த்துவார்- ஸ்டெயின் கணிப்பு..!
- பும்ரா களம் இறங்க வாய்ப்பில்லை.
- ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார்கள்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் தொடங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இடம் பெறமாட்டார் எனத் தெரிகிறது. இதனால் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை முன்னின்று நடத்த உள்ளார்.
முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் என்று களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முகமது சிராஜ் லண்டன் ஓவல் மைதானத்தில் 5 விக்கெட் வீழ்த்துவார் என ஸ்டெயின் கணித்துள்ளார்.