கிரிக்கெட் (Cricket)

ENGvIND 4th Test: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த பும்ரா

Published On 2025-07-26 19:03 IST   |   Update On 2025-07-26 19:03:00 IST
  • விக்கெட்கள் வீழ்த்தியபோதிலும் இந்திய பவுலர்கள் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்.
  • ஜடேஜா 143 ரன்களும் சிராஜ் 140 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

விக்கெட்கள் வீழ்த்தியபோதிலும் இந்திய பவுலர்கள் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். ஜடேஜா 143 ரன்களும் சிராஜ் 140 ரன்களும் பும்ரா 112 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 107 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

குறிப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு போட்டியில் 100 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்து பும்ரா மோசமான சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News