கிரிக்கெட் (Cricket)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்

Published On 2024-10-08 18:04 IST   |   Update On 2024-10-08 18:04:00 IST
  • இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
  • இந்த டி20 தொடரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருடன் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News