2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
கிரெனடா:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 110 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி 112 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.