கிரிக்கெட் (Cricket)

ஆசியக் கோப்பை: மண்ணைக் கவ்விய ஹாங் காங் - முதல் வெற்றியை ருசித்த ஆப்கானிஸ்தான்

Published On 2025-09-10 00:09 IST   |   Update On 2025-09-10 00:09:00 IST
  • ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகள் உள்ளன.
  • இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

வரும் 28-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

நேற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.

இதன் பின் பேட்டிங் இறங்கிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. இதனால் முதல் நாள் போட்டியில் சீனாவின் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.

வரும் நாட்களில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முன்னதாக இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. 

Tags:    

Similar News