கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை 2025: ஓமனுக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!

Published On 2025-09-19 21:51 IST   |   Update On 2025-09-19 21:51:00 IST
  • சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.
  • அபிஷேக் சர்மா 15 பந்தில் 38 ரன்கள் அடித்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.

இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.

5ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் பவர்பிளேயின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா 6 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.

8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.

4ஆவது விக்கெட்டுக்கு சஞச் சாம்சன் உடன் அக்சார் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் அதிரடியாக 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே இந்தியா 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

ஷிவம் துபே (5) ரன்னில் வெளியேற சுஞ்சு சாம்சன் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவருடைய மெதுவான டி20 அரைசதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹர்ஷித் ராணா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். அவர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News