கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-09-25 19:43 IST   |   Update On 2025-09-25 19:43:00 IST
  • இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
  • இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

வங்கதேச அணி வெற்றி பெற்றால் வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் ஜாகர் அலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Tags:    

Similar News