கிரிக்கெட் (Cricket)

ஆர்.சி.பி. அணி 5 கோப்பைகள் வெல்ல 72 ஆண்டுகள் ஆகும்: அம்பதி ராயுடு

Published On 2025-08-19 17:06 IST   |   Update On 2025-08-19 17:06:00 IST
  • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி 18 ஆண்டு கழித்து கோப்பை வென்றது.
  • ஐ.பி.எல். கோப்பை வெல்வது எவ்வளவு கடினம் என இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்றார்.

புதுடெல்லி:

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகக் கோப்பை வென்றது.

ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்றது தொடர்பாக ஆதரவான கருத்துகளும், எதிர் கருத்துகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்றால், 5 கோப்பைகளை வெல்ல அவர்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்று இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News