கிரிக்கெட் (Cricket)
11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது: கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் ரிட் மனு தாக்கல்
- ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் ரிட் மனு பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்படலாம் என்பதால் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி இந்த ரிட் மனு கொடுத்துள்ளனர்.
இதனிடையே தனிப்படை போலீசார் அதிரடியாக இன்று காலை முதல் கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சங்க செயலாளர், பொருளாளர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.